இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்

இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்  :
கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் நாம் அனைவரும் நமது குடுப்பத்துடன் மகிழ்ச்சியாக அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டோம். இதன் மூலம் குடும்பத்தினரிடம் ஒற்றுமையும், மன அமைதியும்  காணப்பட்டது.
தற்போதைய காலத்தில் கைபேசி பயன்பாடு அதிகரித்ததால் , உணவு உட்கொள்ளும்  தருணத்தில் பெற்றோர் மற்றும் உறவினருடன் சரியானா புரிதல் இல்லாமை  நிலவுகிறது. இதன் காரணமாக பெற்றோர்கள் தனது குழந்தைகளை சரியாக வழி நடத்த இயலவில்லை.
நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற கூற்றுக்கிணங்க கூட்டு குடும்பமாக வாழும் பொழுது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி போன்ற அனைத்து உறவினரிகளுடன் வாழும் பொழுது உறவினர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே மன நிம்மதி மற்றும் பொது அறிவு வளருகிறது. துன்பம் நேரும் பொழுது ஒருவர்க்கொருவர் உதவியாக இருக்கமுடியும்.
திணிக்கப்பட்டவை:
அக்காலத்தில் வாகனமானது போக்குவரத்திற்கு மட்டுமே பயன்பட்டது.ஆனால் இக்காலத்தில் வாகனம், போக்குவரத்துக்கு பயன்படுவதை  காட்டிலும் பகட்டு காட்டுவதற்கு பயன்படுகிறது.மேலும் விளம்பரமானது குறிப்பிட்ட இருசக்கர வாகனஙகளை வாங்குவதற்கு தூண்டுவது மட்டுமல்லாமல் நம் இருசக்கர வாகனங்களை வைத்திருக்க வேண்டுமென இச்சமூகம் நம்மை திணிக்கின்றது.

செல்பேசி ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டது ஆனால் தற்போது தொழில்நுட்பம் முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் சிந்தனை திறன் குறைந்து காணப்படுகிறது.
 தற்பொழுது சமூக ஊடகத்தில் தேவையற்ற செய்திகள் மிகுதியாகவும், தேவையான செய்திகளை குறைவாகவும் பகிரபடுகின்றன. அது மட்டுமன்றி இணையத்தை தறவராக பயன்படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக நாள் முழுவதும் இணைப்பிலே இருப்பது, மற்றும் சமூக  வலைதளஙகளில் தனது ஸ்டேட்டஸ் பகிறுகின்றனர், உணவகத்திற்கு சென்று உணவு உண்ணும் முன்பு புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் போடுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுதல் மிகுதியாக உள்ளது.
முன்னொரு பொழுதில் சிறுவர்களிடியே  உடற்சார்ந்த விளையாட்டு மிகுதியாய் இருந்தது, ஆனால் தற்பொழுது கைபேசியில் விளையாடும் அவலம் நிகழ்கிறது.
இது போன்ற தேவையற்ற பயன்பாடுகளை முழுவதுமாக தவிர்க்க இயலாது, அனால் குறைத்து கொள்ளலலாம்.








Comments